Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகின் நீண்ட கால பிரதமர் கலீஃபா பின் சல்மான் காலமானார்…

உலகின் நீண்ட கால பிரதமர் கலீஃபா பின் சல்மான் காலமானார்…
, புதன், 11 நவம்பர் 2020 (16:00 IST)
உலகின் நீண்டகாலமாக பிரதமராகச் சேவை ஆற்றி வந்த பஹ்ரைனின் இளவரசர் கலீஃபா பின்  சல்மான்  அல்கலீஃப் இன்று காலமானார் என அந்த நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 

இளவரசர் கலீஃபா பின் சல்பான் கடந்த 1935 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி பிறந்தவர் ஆவார்.   இவர் பஹ்ரைன் சுதந்திரம் பெற்ற ஆகஸ்ட் 15, 1971 ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டின் இளவரசர் மற்றும் அரசியல்வாதியாகச் செயல்பட்டு வந்தார்.

இவர் உலகில் நீண்ட கால பிரதமராக சுமார் 49 ஆண்டுகள் அந்நாட்டிற்குச் சேவை ஆற்றிவந்தது சாதனையாகக் கருதப்படுகிறது. கலீஃபா பின் சல்பான் இன்று அமெரிகாவில் உள்ள மாயோ என்ற மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 84 ஆகும்.

அவரது உடல் அவரது சொந்த இல்லத்திற்குக் கொண்டுவரப்பட்டு, இறுதிச்சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு.

மற்ற உலக நாட்டின் தலைவர்கள் கலீஃபா பின் சல்மான் மரணத்திற்கு இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜோ பைடன்: "டிரம்ப் தோல்வியை ஏற்க மறுப்பது சங்கடத்தை தருகிறது"