இந்தியா முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்ட நிலையில் பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணம் வசூல் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் சுங்க சாவடிகளில் பாஸ்டேக் நடைமுறை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே அமல்படுத்தப்பட்ட நிலையில் உடனடியாக அனைத்து வாகனங்களும் பாஸ்டேக் நடைமுறைக்கு மாற இயலாது என்பதால் அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் அனைத்து சுங்கசாவடிகளிலும் ஒரே ஒரு கட்டணம் செலுத்தும் திறப்பு மட்டும் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் இருந்து நாடு முழுவதும் பாஸ்டேக் மூலம் சுங்கசாவடி கட்டணம் செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனால் பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் சுங்கசாவடிகளை கடப்பதில் சிரமங்கள் எழுந்துள்ள நிலையில் பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு வழக்கமான சுங்க கட்டணத்தை விட இரு மடங்கு அதிகமான கட்டணம் பெறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.