Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ராமர் கோவில் கும்பாபிஷேகம்: வீடுகளில் விளக்கேற்றும் பொதுமக்கள்..!

Siva
திங்கள், 22 ஜனவரி 2024 (06:55 IST)
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. இன்று மதியம் 12.15 மணி முதல் 12.45 மணிக்குள் பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்கிறார் 
 
கும்பாபிஷேக விழாவில் அயோத்தி நகரில் பிரபலங்கள், பக்தர்கள் குவிந்து வருகின்றனர்
 
இன்று ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு தமிழகம் உள்பட நாடு முழுவதிலும் அனைத்து வீடுகளிலும் தீபம்  ஏற்றி கொண்டாட தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். மக்கள் அனைவரும் தங்களின் வீடுகளில் ராம ஜோதி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்,
 
மேலும் ராமர் கோவில் பிரதிஷ்டையை முன்னிட்டு தமிழ்நாட்டு கோவில்களில் இன்று சிறப்பு பூஜைகள்  நடைபெறுகிறது. தமிழகத்தின் கோயில்களில் இன்று சிறப்பு வழிபாடு, அன்னதானம் - வீடுகளிலும்  தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்படுகிறது. 
 
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி போலீசாரின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் அயோத்தி வந்துள்ளதாகவும், போலீசார், மத்திய பாதுகாப்பு படையினர் என 30,000 பேர் தீவிர கண்காணிப்பு  பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் அயோத்தி நகர் முழுவதும் 10,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்பதும், வெடிகுண்டு நிபுணர்கள், பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments