தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு இருந்து வந்ததை அடுத்து இன்று 10 ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,246 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 10,952 என்றும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 96 என்றும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 47,06,856 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை எண்ணிக்கை 95,828 என்றும் கேரள மாநில அரசு அறிவித்துள்ளது