Publish Date: Sun, 30 Jan 2022 (09:25 IST)
Updated Date: Sun, 30 Jan 2022 (09:30 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நிலையில் கடந்த 3 நாட்களாக குறைந்து வருகிறது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் மீண்டும் மிக வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 2,34,281 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,10,92,522 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 893 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 4,94,091 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,87,13,494 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 18,84,937 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.