Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலகக்கோப்பை U19 கிரிக்கெட்: காலிறுதியில் இந்தியா அபார வெற்றி!

உலகக்கோப்பை U19 கிரிக்கெட்: காலிறுதியில் இந்தியா அபார வெற்றி!
, ஞாயிறு, 30 ஜனவரி 2022 (07:49 IST)
உலகக்கோப்பை U19 கிரிக்கெட்: காலிறுதியில் இந்தியா அபார வெற்றி!
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
 
நேற்றைய காலிறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணி மோதிய நிலையில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 
 
இதனை அடுத்து 112 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 30.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இதனை அடுத்து இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பிப்ரவரி 2ஆம் தேதி நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஸ்திரேலிய ஓபன்- ஆஸ்லே பார்டி பட்டம் வென்று சாதனை