மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு நினைவு மண்டபம் அமைக்க மத்திய அரசு கேட்டிருந்த நிலத்தை தமிழக அரசு ஒதுக்கவில்லை என மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார்.
அப்துல் கலாம் மறைந்து ஒரு வருடம் ஆன நிலையில் அவருக்கு நினைவு மண்டபம் இன்னமும் அமைக்கப்படவில்லை எனவும், அதற்கான நிலத்தை தமிழக அரசு வழங்க தாமதம் செய்து வருவதாகவும் மத்திய அரசு கூறுவதாக மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் தெரிக் ஓ பிரைன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், தமிழக அரசிடம் அப்துல் கலாமுக்கு நினைவு மண்டபம் அமைக்க 5 ஏக்கர் நிலம் கேட்டதாகவும், ஆனால் 1.83 ஏக்கர் நிலம் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் தெரிவிவித்தார். கூடுதல் நிலத்திற்கு காத்திருக்காமல் வரும் 27-ஆம் தேதி அடிக்கல் நாட்டப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.