Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே நாளில் 5 லட்சம் லட்டுகள் - திருப்பதி ஏழுமலையான் கோவில் புதிய சாதனை

Advertiesment
ஒரே நாளில் 5 லட்சம் லட்டுகள் - திருப்பதி ஏழுமலையான் கோவில் புதிய சாதனை
, செவ்வாய், 2 அக்டோபர் 2018 (09:40 IST)
திருப்பதி ஏழுமலையான கோவிலில் நேற்று ஒரு நாள் மட்டும் 5 லட்சம் லட்டுகள் விற்பனை ஆகியுள்ளது.
ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலகப் பிரசக்தி பெற்ற கோவிலாகும். உலகமெங்கிலிருந்தும் இந்த கோவிலுக்கு பக்தர்கள் வருவது வாடிக்கை.
 
அதிலும் நேற்று புரட்டாசி சனி என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று ஒரு நாள் மட்டும்  5 லட்சத்து 13 ஆயிரத்து 566 லட்டுகள் விற்பனையாகி இருப்பதாக கோவில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
webdunia
கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரே நாளில் 4 லட்சத்து 64 ஆயிரத்து 152 லட்டுகள் விற்றுத் தீர்ந்ததே சாதனையாக இருந்த நிலையில் நேற்று 5 லட்சத்து 13 ஆயிரத்து 566 லட்டுகள் விற்பனையாகி புதிய சாதனையை படைத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் - காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை