Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே நாளில் ரூ. 6.28 கோடி காணிக்கையை அள்ளிய திருப்பதி ஏழுமலையான் கோயில்

Advertiesment
ஒரே நாளில் ரூ. 6.28 கோடி காணிக்கையை அள்ளிய திருப்பதி ஏழுமலையான் கோயில்
, வெள்ளி, 27 ஜூலை 2018 (12:58 IST)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ. 6.28 கோடி காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது.
உலகின் பணக்காரக் கடவுள் என கருதப்படும் திருப்பதி ஏழுமலையானின் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமாக பக்தர்கள் குவிவார்கள். அதே போல் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையும் ஏராளம். கடந்த ஆண்டு மட்டும் உண்டியல் மூலம் 1100 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. கோயில் உண்டியலில் பக்தர்கள் நகை, பணம், வைர நகைகள், வீட்டு பத்திரம், தாலி என பலவற்றை செலுத்துகிறார்கள்.
webdunia
இதுவரை உண்டியலில் வசூல் ஆன தொகையிலே கடந்த ஏப்ரல் மாதம் 2-ந் தேதி ஸ்ரீராம நவமியன்று, உண்டியலில் பக்தர்கள் ரூ.5.73 கோடி காணிக்கை செலுத்தியது தான் அதிகமாக இருந்தது. உண்டியலில் சேரும் பணம் அனைத்தையும் பேங்கில் செபாசிட் செய்து அதில் வரும் வட்டிப் பணத்தை தான் பக்தர்களுக்கு அன்னதானம் செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில் இதுவரை எப்போதும் இல்லாத வகையில் நேற்று ரூ. 6.28 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை : உண்மை நிலவரம் என்ன?