Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப். மாத தரிசன டிக்கெட்.. இன்று மாலை 4 மணிக்கு ஆன்லைனில்!

Webdunia
திங்கள், 27 ஜூன் 2022 (10:52 IST)
செப்டம்பர் மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று மாலை 4 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
 
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனத்திற்காக அண்டை மாநிலங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து மக்கள் பலர் வருகை தருவது வாடிக்கையாக உள்ளது. கடந்த சில மாதங்களாக விடுமுறை காலம் என்பதால் திருப்பதி செல்வோர் எண்ணிக்கை அதிகரித்தது. கடந்த மாதத்தில் அதிகமான பக்தர்கள் வருகையில் சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு தரிசனத்திற்காக மக்கள் காத்திருந்ததாக செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில் சமீபத்தில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் தொடங்கிய நிலையில் சில நிமிடங்களுக்குள்ளாக அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது. இதனால் டிக்கெட் கிடைக்காதவர்கள் இலவச தரிசனம் மூலமாகவே தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
 
இதனால் வரும் மாதங்களில் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் நேர ஒதுக்கீடு டோக்கன் வழங்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து தற்போது செப்டம்பர் மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் இன்று மாலை 4 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
 
டிக்கெட்டுகளை பக்தர்கள் வழக்கம் போல் இன்று மாலை 4 மணி முதல் 29 ஆம் தேதி வரை ஆன்லைனின் முன்பதிவு செய்யலாம். மொத்தம் உள்ள 46,470 டிக்கெட்டுகளில் 8,070 டிக்கெட்டுகள் குலுக்கல் முறை தேர்வுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 38,400 டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் முன்பதிவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments