Publish Date: Mon, 05 Sep 2022 (16:27 IST)
Updated Date: Mon, 05 Sep 2022 (16:28 IST)
திருப்பதியில் பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 27ம் தேதி முதல் தொடங்க படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது
ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த மெகா திருவிழா தொடக்கத்தை அடுத்த கொடியேற்று விழா நடைபெற உள்ளதாகவும் கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் மஞ்சள் நிறத்திலான கொடியில் சிவப்பு நிறத்தில் கருடன் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
பிரம்மோற்சவ விழாவின் கடைசி நாளில் சந்தனப்பொடி அபிஷேகம் செய்து நீராடல் செய்யப்படும் என்றும் பிரமோற்சவ விழா காரணமாக ஒன்பது நாட்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Mahendran
Publish Date: Mon, 05 Sep 2022 (16:27 IST)
Updated Date: Mon, 05 Sep 2022 (16:28 IST)