Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தீம்தலக்கடி தில்லாலே – வெற்றியில் ஆபாச ஆட்டம் போட்ட திரிணாமூல் காங்கிரஸ்

Advertiesment
தீம்தலக்கடி தில்லாலே – வெற்றியில் ஆபாச ஆட்டம் போட்ட திரிணாமூல் காங்கிரஸ்
, புதன், 26 ஜூன் 2019 (19:46 IST)
மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதை கொண்டாட மேற்கு வங்க எம்.பி ஒருவரது ஏரியாவில் ஆபாச குத்தாட்டம் போட்டது இணையத்தில் வெளியாகி சந்தி சிரிக்கிறது.

மேற்கு வங்கத்தில் உள்ள ஜாதவ்பூர் தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர் மிமி சக்ரோபர்தி. பெங்காலி நடிகையான இவர் பல பெங்காலி திரைப்படங்களிலும், நாடகங்களிலும் நடித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார் மிமி.
webdunia

இந்நிலையில் போன வாரம் செவ்வாய் கிழமை அன்று எம்.பிக்களின் பதவி பிரமாணம் நடைபெற்றது. இதில் மிமி ஜாதவ்பூர் எம்.பியாக பதவியேற்றார். இதை கொண்டாடும் வகையில் பங்கர் பகுதியில் உள்ள நிம்குரியா கிராமத்தில் திரிணாமூல் காங்கிரஸார் விழாவை ஏற்பாடு செய்திருந்தனர். உள்ளூர் திரிணாமூல் காங்கிரஸார் நடத்திய அந்த விழாவில் அனைவரும் மது அருந்தியதோடு, பெண்களை வைத்து ஆபாச நடன நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளனர். போஜ்புரி பாடல்களை போட்டு எக்குதப்பாக ஆடிய கில்பான்ஸ் ஆட்டத்தை பலர் தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பாஜக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் அப்பகுதியை சேர்ந்த பாஜக மாவட்ட தலைவர் சுனிப் தாஸ் “இதுதான் திரிணாமூல் காங்கிரஸாரின் கலாச்சாரம்” என கிண்டலடித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுவர்களை மதமாற்ற முயற்சி.. இளைஞர்களுக்கு அடி உதை.. பரபரப்பு செய்திகள்