Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்னடா உரசுது?- நடுரோட்டில் இளைஞரை இரும்பு கம்பியால் அடித்த பெண்: பரபரப்பு வீடியோ

Advertiesment
என்னடா உரசுது?- நடுரோட்டில் இளைஞரை இரும்பு கம்பியால் அடித்த பெண்: பரபரப்பு வீடியோ
, புதன், 26 ஜூன் 2019 (18:48 IST)
சண்டிகரில் கார் ஓட்டி சென்ற இளம்பெண் மற்றொரு காரில் வந்தவரை தகாத வார்த்தைகளால் திட்டி, இரும்பு கம்பியால் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சண்டிகரில் உள்ள ட்ரிப்யூன் டவ்ன் அருகே இரண்டு கார்கள் சென்று கொண்டிருந்தன. முன்னால் சென்ற காரை ஷீத்தல் சர்மா என்பவர் ஓட்டி சென்றார். பின்னால் வந்து கொண்டிருந்த காரை நிதீஷ் என்பவர் ஓட்டி சென்றிருக்கிறார். சாலையில் திரும்புவதற்காக காரை மெதுவாக திருப்பியிருக்கிறார் ஷீத்தல் சர்மா. முன்னால் சென்ற கார் திடீரென திரும்புவதை கவனிக்காத நிதீஷ் காரின் பக்கவாட்டில் மோதி விட்டார்.

இதனால் ஷீத்தலின் காரின் பக்கவாட்டில் சிறிய சிராய்ப்பு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஷீத்தல் காரில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து கொண்டு போய் சரமாரியாக அந்த இளைஞரை தாக்கினார். மேலும் ஆபாசமான வார்த்தைகளில் திட்டியுள்ளார். உடனடியாக அந்த பகுதிக்கு வந்த போலீஸார் இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, ஷீத்தலை கைது செய்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தை வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார் அங்கிருந்த ஒருவர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் ஜில்லென்று மழை!!!