Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரளாவில் பேரழிவு : நிதியுதவி செய்வது எப்படி?

கேரளாவில் பேரழிவு : நிதியுதவி செய்வது எப்படி?
, சனி, 18 ஆகஸ்ட் 2018 (15:53 IST)
கனமழை காரணமாக கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ள கேரளாவுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் உதவிகள் குவிந்து வருகிறது.

 
கேரளாவில் கடந்து 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. நிலச்சரிவு மற்றும் நீரில் மூழ்கி இதுவரை 324 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள மக்களை கொட்டும் மழையிலும் ராணுவ  வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
எனவே, கேரள மாநிலத்திற்கு உதவும் வகையில் தமிழ் திரையுலகினர் பலரும் நிதியுதவி செய்து வருகின்றனர்.  அதேபோல், தமிழகத்தில் இருந்து பலரும் ஆன்லைன் மூலமாக கேரள மாநிலத்திற்கு நிதியுதவி செய்து வருகின்றனர்.
 
கேரள மாநிலத்திற்கு உதவுமாறு ஊடகம், சமூ வலைத்தளங்கள் மூலம் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், சிலருக்கு உதவ மனமிருந்தாலும் எப்படி உதவி செய்வது என்பது தெரியாமல் இருக்கிறது. 
 
உங்களுக்கு உதவ மனமிருந்தால்....
 
https://kerala.gov.in/web/guest/CMDRFService

என்ற இணையதளம் மூலம் நிதியுதவி செய்ய முடியும். 
 
அல்லது, கீழ்கண்ட வங்கி கணக்கில் நேரிடையாக நீங்கள் நிதியை செலுத்த முடியும். 
 
முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதி,
வங்கி கணக்கு எண் : 67319948232
வங்கி : ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 
ஐ.எப்.எஸ்.சி : SBIN0070028
கணக்கு வகை : சேமிப்பு
PAN : AAAGD0584M
SWIFT CODE : SBININBBT08

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜேம்ஸ் பாண்ட் படத்தில் கருப்பின நடிகர்: ஏற்க மறுக்கும் ரசிகர்கள்