Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

3 மாநில தேர்தலில் வெற்றி பெற்ற மத்திய அமைச்சர்கள் ராஜினாமா.. முதல்வர் ஆகிறார்களா?

3 மாநில தேர்தலில் வெற்றி பெற்ற மத்திய அமைச்சர்கள் ராஜினாமா.. முதல்வர் ஆகிறார்களா?
, வெள்ளி, 8 டிசம்பர் 2023 (07:48 IST)
நடைபெற்ற முடிந்த ஐந்து மாநில தேர்தலில் சத்தீஸ்கர் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மத்திய அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் ராஜினாமாவை ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ள.  

சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நரேந்திர சிங் தோமர், பிரகலாத் சிங் பட்டேல் மற்றும் ரேணுகா சிங் ஆகிய மூவரும் ராஜினாமா செய்துள்ளதை அடுத்து அவர்களது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது குறித்த செய்தி குறிப்பையும் ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து மேற்கண்ட 3 முன்னாள் மத்திய அமைச்சர்களும் முதல்வர் வேட்பாளராக  அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.  மேலும் மத்திய அமைச்சரவையில் சிலரது இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.  

அதன்படி பழங்குடியினர் நலத்துறை மந்திரி அர்ஜூன் முண்டா வேளாண் துறையை கூடுதலாக கவனிப்பார் என்றும், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப இணை மந்திரியான ராஜீவ் சந்திரசேகர், ஜல்சக்தி துறை இணை மந்திரியாகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்றும், வேளாண்துறை இணை மந்திரி சோபா கரண்டலே, உணவு பதப்படுத்துதல் துறை இணை மந்திரி பொறுப்பையும் கவனிப்பார் என்றும், சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவின் பவாருக்கு பழங்குடியினர் நலத்துறை இணை மந்திரி பொறுப்பும் கூடுதலாக கவனிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!