Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்: முழு விபரங்கள்..!

சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்: முழு விபரங்கள்..!
, வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (10:08 IST)
சென்னையில் நாளை திருப்பதி திருக்குடை ஊர்வலம் நடைபெற இருப்பதை அடுத்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊர்வலத்தில் பத்தாயிரம் பேர் கலந்து கொள்ள போவதாகவும், இதனை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது
 
காலை 8 மணிமுதல் ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையைக் கடக்கும் வரை என்.எஸ்.சி. போஸ் சாலை,மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்புசாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. இந்த பகுதி வழியாக செல்லும் வாகனஓட்டிகள் ஈ.வே.ரா சாலை, ராஜாஜிசாலை, வால்டாக்ஸ் சாலை,பேசின் பாலம் சாலை மற்றும் பிரகாசம் சாலையைப் பயன்படுத்தலாம்.
 
மாலை 3 மணிமுதல் ஊர்வலம் பேசின் பாலத்தை கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்புசாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. நத வழையாக செல்லும் வாகன ஓட்டிகள் பேசின் பாலம் சாலை, மின்ட் வழியாக பிரகாசம் சாலை அல்லது ராஜாஜி சாலையைப் பயன்படுத்தலாம். மேலும், ஈ.வே.ரா. சாலை, முத்துசாமி சாலை மற்றும் ராஜாஜி சாலைகளைப் பயன்படுத்தலாம்.
 
ஊர்வலம் மூலகொத்தளம் பகுதியை அடைந்தவுடன் பேசின் பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. வாகன ஓட்டிகள் ராஜாஜி சாலை, ஈ.வே.ரா. சாலை மற்றும் டாக்டர்.அம்பேத்கர் காலேஜ் சாலை ஆகிய சாலைகளைப் பயன்படுத்தலாம்.
 
திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் பேசின் பிரிட்ஜ் சாலையில் வரும்போது சூளை ரவுண்டானாவிலிருந்து டெமல்லோஸ் சாலை நோக்கிச் செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை மற்றும் ராஜாமுத்தையா சாலை வழியாகச் செல்லலாம்.
 
ஊர்வலம் ராஜா முத்தையா சாலையில் வரும்போது மசூதி பாயின்டிலிருந்து சூளை ரவுண்டான நோக்கிச் செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாகச் செல்லலாம்.
 
ஊர்வலம் சூளை நெடுஞ்சாலையில் வரும்போது நாராயணகுரு சாலை ஈ.வி.கே சம்பத் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கிச் செல்லஅனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாகச் செல்லலாம்.
 
அவதான பாப்பையா சாலை ஊர்வலம் வரும்போது பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பிலிருந்து சூளைநெடுஞ்சாலை நோக்கிச் செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாகச் செல்லலாம்.
 
பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் ஊர்வலம் வரும்போது டவ்டன் சந்திப்பிலிருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை நோக்கிச் செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் நாராயண குருசாலை வழியாகச் செல்லலாம்.
 
ஓட்டேரி சந்திப்பை ஊர்வலம் அடையும் போது மில்லர்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பிரிக்கிள்ன் சாலை வழியாக ஓட்டேரி சந்திப்பை நோக்கிச் செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாகச் செல்லலாம்.
 
ஓட்டேரி சந்திப்பில் ஊர்வலம் வரும்போது கொன்னூர் நெடுஞ்சாலை மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து ஓட்டேரி சந்திப்பை நோக்கிச் செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் மேடவாக்கம் குளம் சாலை வழியாகச் செல்லலாம்.
 
கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தைஊர்வலம் அடையும்போது ஓட்டேரி சந்திப்பு மற்றும் மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து கொன்னூர் நெடுஞ்சாலை நோக்கிச் செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் ஒட்டேரி சந்திப்பிலிருந்து குக்ஸ் சாலை வழியாகவும், மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து வி.பி காலணி (தெற்கு) தெரு அல்லது அயனாவரம் சாலை வழியாகச் செல்லலாம்.
 
இவ்வாறு போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெட்ரோ ரயில் சேவை இன்று மட்டும் அதிகரிப்பு! – பயணிகள் கவனத்திற்கு!