Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாவது அணி உருவாக வாய்ப்பு உள்ளதா?

Webdunia
வெள்ளி, 10 மே 2019 (07:30 IST)
மக்களவை தேர்தலுக்கு முன்னரே காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணி உருவாக்க ஒருசில தலைவர்கள் முயற்சித்தனர். ஆனால் தேர்தலுக்கு முன் மூன்றாவது அணி அமைக்க ஒருசிலர் உடன்படவில்லை என்பதால் மூன்றாவது உருவாகவில்லை. இது பாஜகவுக்கு எதிரான வாக்குகளை பிரிக்கும் என்பதால் பாஜகவுக்கு சாதகமாகவே கருதப்பட்டது

இந்த நிலையில் ஒருபுறம் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மூன்றாவது அணிக்கான முயற்சியை எடுத்து வந்தாலும் அதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட பலர் இன்னும் வெளிப்படையான ஆதரவை தெரிவிக்கவில்லை. மேலும் பிரதமர் வேட்பாளராக மம்தா அல்லது மாயாவதியை ஏற்றுக்கொள்ளவும் சில தலைவர்கள் தயங்குவதாக தெரிகிறது.

இந்த நிலையில்தான் திடீரென மே 21ஆம் தேதி அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூட்டவுள்ளார். இந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி, முக. ஸ்டாலின் உள்பட பல எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள சம்மதித்துள்ளதாக தெரிகிறது.

எனவே தேர்தல் முடிவுக்கு பின்னரும் மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லை என்றும், ஒன்று ராகுல் காந்தியை பிரதமராக எதிர்க்கட்சி தலைவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் அல்லது காங்கிரஸ் ஆதரவில் ஒரு தலைவர் பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளப்பட்டு கூட்டணி ஆட்சி அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments