ஆட்சி எனக்கு, கட்சி உங்களுக்கு! சசிகலாவுக்கு தூதுவிட்டாரா ஈபிஎஸ்?

Webdunia
வியாழன், 9 மே 2019 (22:08 IST)
ஆட்சியை காப்பாற்ற பலவித முயற்சிகள் செய்து வரும் அதிமுக தலைமை கடைசியாக சசிகலாவிடமே சரண் அடைவது என்ற முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.
 
ஆட்சிக்கு நீடிக்க தேவையான எம்.எல்.ஏக்கள் கிடைக்கவில்லை என்றால் அமமுகவின் ஆதரவை பெற்று ஆட்சியை காப்பாற்றி கொள்ளவும், அதற்கு பதிலாக அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை சசிகலாவுக்கு வழங்கவும் தயார் என்று ஒரு உயரதிகாரி மூலம் ஈபிஎஸ் தூது விட்டிருப்பதாக ஒரு வதந்தி பரவி வருகிறது.
 
ஆனால் இந்த சமாதானத்திற்கு சசிகலா எந்தவித ரியாக்சனும் காண்பிக்கவில்லையாம். இப்போதைக்கு தினகரன் ஆலோசனையின்பேரில் நடக்கவே அவர் விரும்புகிறாராம். எனவே ஈபிஎஸ் சமாதான முயற்சி பலனளிக்காது என்றே நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்த்தால் மீண்டும் ஓபிஎஸ் தர்மயுத்தம் செய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments