கடைக்குள் புகுந்து பணத்தை திருடிவிட்டு நான் உங்கள் விருந்தாளி எனக் கடிதம் எழுதிவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூரில் ஒரு பிரபல இனிப்புக் கடை இயங்கி வருகிறது.
இங்கு தினமும் நூற்றுக் கணக்கான வாடிக்கையாளர்கள் வருவர் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த இனிப்புக் கடைக்குள் புகுந்த திருடன் அங்கிருந்த பணத்தைத் திருவிட்டு, என்னைப் பற்றி போலீஸில் புகாரளிக்க வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அந்த திருடன் எழுதியுள்ள கடிதத்தில், நான் பசியாக இருந்ததால் உங்கள் கடைக்குள் நுழைந்து சாப்பிட்டேன். காலில் அடிப்பட்டதால் எனக்குப் பணம் தேவையாக இருந்ததால் கல்லாவில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டேன், நீங்கள் என்பது பின்னர் எனக்குப் புரிந்தது, அதனால் இக்கடிதம் எழுதுகிறேன். போலீஸில் புகார் அளிக்கதீர்கள்….. நான் உங்கள் விருந்தாளி என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் கடிதம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.