Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருடப்போன வீட்டில் குடித்தனம் நடத்திய திருடன்! அரை தூக்கத்தில் கைது செய்த போலீஸ்!

Advertiesment
Andhra Pradesh

Prasanth K

, வியாழன், 3 ஜூலை 2025 (10:59 IST)

ஆந்திராவில் திருடப்போன இடத்தில் திருடியதோடு மட்டுமல்லாமல் நாள் கணக்கில் திருடிய வீட்டிலேயே திருடன் தங்கியதால் சிக்கியுள்ளான்.

 

ஆந்திராவின் கொல்லப்பள்ளியை சேர்ந்த விவசாயி சீனிவாசராவ். இவரது மகன் விசாகப்பட்டிணத்தில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார். விவசாயியான சீனிவாசராவ் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் உள்ள பணிகளை பார்க்க மனைவியுடன் சொந்த கிராமத்திற்கு சென்றுவிட்டார்.

 

அந்த சமயம் பூட்டிக் கிடந்த வீட்டை நோட்டம் விட்ட திருடன் ஒருவன் ஒரு நாள் ராத்திரி உள்ளே புகுந்து வெள்ளி பொருட்கள், தங்க நகைகள் உள்ளிட்டவற்றை திருடியுள்ளான். அதை வெளியே சென்று விற்று காசாக்கிய அந்த திருடன் அந்த காசில் மதுப்பாட்டில், உணவு என வாங்கிக் கொண்டு மீண்டும் அந்த வீட்டிற்கே சென்று சாப்பிட்டு விட்டு உறங்கியுள்ளான்.

 

அந்த வீடு திருடனுக்கு பிடித்து போனதால் 5 நாட்களுக்கும் மேலாக அந்த வீட்டிலேயே தொடர்ந்து தங்கி வந்துள்ளான். ஆள் இல்லாத வீட்டில் விளக்குகள் எரிவதும், டிவி சத்தம் கேட்பதையும் கண்டு சந்தேகமடைந்த பக்கத்து வீட்டுக்காரர், சீனிவாசராவின் மகனுக்கு போன் செய்து கூறியுள்ளனர். உடனடியாக அவர் போலீஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளார்.

 

அதன்படி உடனடியாக அங்கு விரைந்த போலீஸார் வீட்டுக்குள் மது அருந்தி விட்டு சுகமாக அரை தூக்கத்தில் கிடந்த திருடனை அலேக்காக கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? மடப்புரம் அஜித்குமார் மாதிரியா? ஈபிஎஸ் கேள்வி