Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா 3வது அலை குழந்தைகளை, சிறுவர் - சிறுமிகளை குறி வைக்குமா?

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (07:29 IST)
கொரோனாவின் அடுத்த அலையில் குழந்தைகளே தீவிரமாக பாதிக்கப்படுவார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என தகவல். 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 2 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது. 
 
கொரோனா முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலை கடுமையான பாதிப்பையும், அதிக பலியையும் ஏற்படுத்தி உள்ளது. 2வது அலையே இப்போது தான் கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில் 3வது அலையை விரைவில் எதிர்ப்பார்க்கலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த 3வது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டு வருகிறது. 
 
ஆனால், இந்தியாவிலோ அல்லது சர்வதேச அளவிலோ கொரோனாவின் அடுத்த அலையில் குழந்தைகளே தீவிரமாக பாதிக்கப்படுவார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என எய்ம்ஸ் இயக்குநர் இது குறித்த அச்சத்தை போக்கியுள்ளார். 
 
இதேபோல மத்திய சுகாதார அமைச்சகமும் 3வது அலையில் கடுமையாக பாதிக்கப்படப் போவது சிறுவர்களும், குழந்தைகளும்தான் என்கின்றன தகவல்களை நம்ப வேண்டாம் என வலியுறுத்தி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜெர்மனி அதிபர் ஒரு திறமையற்ற முட்டாள்.. ஜனநாயகத்திற்கு எதிரான கொடுங்கோலன்.. எலான் மஸ்க்

ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்.. சிறப்பு ஏற்பாடுகளை செய்த பிர்லா கோளரங்கம்..!

பரந்தூரை அடுத்து வேங்கை வேல் செல்கிறாரா விஜய்? பரபரப்பு தகவல்..!

அதானி மகனுக்கு எளிமையான திருமணம்.. ஒரு சில லட்சங்கள் மட்டுமே செலவா?

தமிழகத்தில் பதுங்கி இருக்கும் வங்கதேசத்தினர். என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments