மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 1500 கோடி ரூபாய் இந்தியன் ரயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது
மூத்த குடிமக்களுக்கு பல்வேறு சலுகைகள் ரயில்வே துறையால் வழங்கப்பட்டிருந்த நிலையில் அந்த சலுகைகள் அனைத்தும் சமீபத்தில் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மட்ட இது குறித்த கேள்விக்கு மூத்த குடிமக்களுக்கான சலுகையை நிறுத்தியதால் இந்தியன் ரயில்வே கூடுதல் வருவாய் 1500 கோடி கிடைத்துள்ளது என ரயில்வே துறை பதிலளித்துள்ளது
ஏற்கனவே மூத்த குடிமக்களுக்கு சலுகை ரத்து செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது