கணவரை கோடரியால் தாக்கி, பிறப்புறுப்பை அறுத்துக்கொன்ற மனைவி!

Webdunia
வெள்ளி, 3 மார்ச் 2023 (15:53 IST)
மத்திய பிரேதேச மாநிலம் சிங்ராலி மாவட்டத்தில் கணவனுக்கு தூக்க மாத்திரைகள் கொடுத்து, கோடரியால் மனைவி வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சிங்ராலியில் வசித்து வந்தவர் பிரேந்தர் குர்ஜார். இவர், ஐந்துமுறை திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், குர்ஜார் ஐந்தாவதாகத் திருமணம் செய்து கொண்ட மனைவி காஞ்சன் குர்ஜார் தனது கணவரை கோடரியால் தாக்கிக் கொன்றதுடன், அவரது பிறப்புறுப்பையும் அறுத்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இறந்தவரின் உறவினர்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரித்தனர்.

இதில்,காஞ்னை விசாரித்தபோது, அவர், ''தன் கணவன் போதைக்கு அடிமையானதால் சித்ரவதை செய்ததாகவும், இதனால், கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி கணவனின் உடலில் 20 தூக்கமாத்திரைகள் கலந்துகொடுத்து, அவர் மயக்கம் அடைந்தபின்,  கோடரியால் பலமுறை தாக்கினேன். அவரது பிறப்புறுப்பையும் அறுத்துக் கொன்றேன்'' என்று தெரிவித்துள்ளார்.

அப்பகுதியில், இந்தச் சம்பவம் பெரும் பரபர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. தமிழக அரசு மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments