Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொழிலதிபர்களின் கடன்களை தள்ளுபடி செய்த பிரதமர்..! ராகுல் காந்தி...!!

Ragul Gandhi

Senthil Velan

, வியாழன், 11 ஏப்ரல் 2024 (18:06 IST)
இந்திய வரலாற்றில் முதல்முறையாக விவசாயிகள் வரி செலுத்துகிறார்கள் என்றும் ஆனால் தொழிலதிபர்களின் கடன்களை பிரதமர் மோடி தள்ளுபடி செய்தார் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
 
ராஜஸ்தான் மாநிலம் பிகானிர் நகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார்.  அப்போது பேசிய அவர் நாட்டில் வேலையின்மை மற்றும் பணவீக்கம் என இரண்டு முக்கிய பிரச்னைகள் உள்ளது என தெரிவித்தார்.
 
வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் ஆகியவை நாட்டின் மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது என்றும் பொதுமக்களின் குரலை உயர்த்துவதுதான் ஊடகங்களின் வேலை, ஆனால், அதைச் செய்ய அவர்களின் கோடீஸ்வர உரிமையாளர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
 
இந்தியாவின் 70 கோடி மக்களிடம் உள்ள பணத்தின் அளவு, 22 பணக்காரர்களிடம் உள்ளது என்று ராகுல் காந்தி கூறினார். விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு கோரி  தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் நாட்டில் இளைஞர்கள் வேலையில்லா சுழல் நிலவுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

 
விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று அழைக்கும் பிரதமர் மோடி விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுக்க மறுத்துவிட்டார் என்றும் இந்திய வரலாற்றில் முதல்முறையாக விவசாயிகள் வரி செலுத்துகிறார்கள் என்றும் ஆனால் தொழிலதிபர்களின் கடன்களை பிரதமர் மோடி தள்ளுபடி செய்தார் என்றும் ராகுல் காந்தி விமர்சித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திரா காந்தியை சுட்டுக்கொன்ற பாதுகாவலரின் மகன் போட்டி.. சுயேட்சையாக களமிறங்குகிறார்.+