Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மருத்துவரின் தலையை துண்டித்த மர்ம நபர்கள்

Advertiesment
மருத்துவரின் தலையை துண்டித்த மர்ம நபர்கள்
, செவ்வாய், 27 மார்ச் 2018 (15:21 IST)
உத்திரபிரதேசத்தில் மருத்தவர் ஒருவர் மர்ம நபர்களால் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசத்தில் நாளுக்கு நாள் சட்ட விரோத செயல்கள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இளம் பெண்கள் மீதான பாலியல் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதன் மூலம் உ.பி பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக திகழ்கிறது. மேலும் பல்வேறு கொலை சம்பவங்களும் நடைபெறுகிறது. 
 
உத்திரபிரதேச மாநிலம் கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் அஸ்கார் அலி(45). இவர் லக்னோவின் பலகன்ஜி பகுதியில் உள்ள மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
 
இந்நிலையில் சம்பவத்தன்று லக்னோவில் ஒருவரின் உடல் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கொலை செய்யப்பட்டது அஸ்கார் அலி என போலீஸார் உறுதி செய்தனர்.
webdunia
இதனையடுத்து போலீஸார் அஸ்கார் அலியை கொடூரமாக கொலை செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றன்ர். மேலும் கொலைக்கான காரணத்தையும் விசாரிக்கின்றனர். லக்னோவில் மருத்துவர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக - பாஜக இடையே சூதாட்டம்; நாடாளுமன்ற குழுத் தலைவர் குற்றச்சாட்டு