Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிக்கக் கூட தண்ணி கிடைக்காது! அடி மடியில் கைவைத்த மோடி! அதிர்ச்சியில் பாகிஸ்தான்!

Prasanth Karthick
வியாழன், 24 ஏப்ரல் 2025 (11:25 IST)

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக சிந்து நதி ஒப்பந்தத்தை பிரதமர் மோடி ரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய அரசும், ராணுவமும் இதற்கான பதிலடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

 

பயங்கரவாத சம்பவத்தை கண்டித்து பாகிஸ்தானுடனான நதிநீர் பங்கீடு ஒப்பந்தத்தை ரத்து செய்ய பிரதமர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சிந்து நதியில் இருந்து பிரியும் ஏராளமான கிளை நதிகள் இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளிடையே பாய்கின்றன. இதில் ரவி, பியாஸ் மற்றும் சட்லெஜ் நதிகளின் மீது இந்தியா உரிமைக்கொண்டுள்ளது.

 

சிந்து, ஜீலம் மற்றும் செனேப் நதிகளின் மூலமாக பாகிஸ்தான்  நதிநீர் பெறுகிறது. பாகிஸ்தானின் விவசாயம் மற்றும் குடிநீருக்கான 80 சதவீத நீர் தேவை இந்த நதிகளை நம்பியே உள்ளது. இந்நிலையில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித் ஷாவுக்கு ஓய்வளிக்க வேண்டும்! சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்

உன்னை கொல்ல போகிறோம்.. கௌதம் காம்பீருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் மிரட்டல் மின்னஞ்சல்..!

தொடர் ஏற்றத்திற்கு சற்றே சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

சோனியாவின் குடும்பம் முஸ்லிம்களையே பார்க்கிறது: ராபர்ட் வதேரா பேச்சுக்கு பாஜக கண்டனம்..!

இன்றும் இறங்கிய தங்கம் விலை.. ஆனாலும் 9000ஐ விட கீழே வரவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments