Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இது வெறும் டிரைலர்தான்- பிரதமர் மோடி

இது வெறும் டிரைலர்தான்- பிரதமர் மோடி
, வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (18:01 IST)
ஒட்டுமொத்த பாரதநாடு மக்களும் எதிர்பார்த்த மத்திய இடைக்கால பட்ஜெட்டை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இன்று  தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட் பற்றி  இன்று காலை முதல் பல்வேறு கட்சி தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.இந்த பட்ஜெட்டில் முக்கியமாக நடுத்தர வர்க்கத்தினர் நலனுக்கான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைக்கால பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
அனைத்து தரப்பு மக்களும் பயன்படும் வகையில் படெட் அமைந்துள்ளது. சிறுதொழில், விவசாயிகள், நடுத்தர வர்க்கம் என எல்லோரையும் பாதுகாக்கும் வகையில் பட்ஜெட் உள்ளது.
 
இந்த பட்ஜெட் ட்ரெயிலர்தான். தேர்தலுக்கு பின் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பாதைக்கானதாக பட்ஜெட் உள்ளது.இது 12 கோடி விவசாயிகளுக்கு பலனளிக்கக் கூடியதாக உள்ளது. 
 
ஆனால் இதுவரை அறிவிக்கப்பட்ட திட்டங்களில் அதிகபட்சமாக 3 கோடி விவசாயிகள் பயன்பெற்று வந்த நிலையில் தற்போது கடைக்கோடி குடிமகனுக்கும் சென்றடையும். நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனின் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும் திட்டங்களே இருக்கிறது. 
 
ஆயுஷ்மான் பிரதான் மற்றும் மந்திரி யோஜனா திட்டங்களில் அனைத்து மக்களூம் நன்மை பெறுவார்கள் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சனி, ஞாயிறுகளில் பள்ளி – ஜாக்டோ ஜியோப் போராட்ட எதிரொலி !