Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கழுத்தை நெரித்து உயிருடன் புதைத்த கூலிப்படை! உயிருடன் வந்து நின்று அதிர்ச்சி கொடுத்த இளம்பெண்!

Advertiesment
Buried Hands

Prasanth Karthick

, திங்கள், 11 நவம்பர் 2024 (11:20 IST)

கர்நாடகாவில் கூலிப்படையால் கழுத்து நெறித்து கொன்று புதைக்கப்பட்ட பெண் உயிருடன் தப்பித்து வந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூரில் உள்ள திப்புரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் பிந்துஸ்ரீ. இவருடைய கணவர், அதே பகுதியை சேர்ந்த யோகா ஆசிரியையாக இருக்கும் இளம்பெண்ணுடன் உறவில் இருப்பதாக பிந்துஸ்ரீ சந்தேகித்து வந்தார்.

 

இதனால் யோகா ஆசிரியையை கொலை செய்ய முடிவு செய்த பிந்துஸ்ரீ, பெங்களூரை சேர்ந்த சதீஷ் ரெட்டி என்ற கூலிப்படை ஆளை தொடர்பு கொண்டுள்ளார். அதன்படி கச்சிதமாக திட்டம் போட்ட சதீஷ் ரெட்டி, இளம்பெண்ணின் யோகா வகுப்பில் சேர்ந்து 3 மாதமாக யோகா பயிற்சி செய்து வந்துள்ளார்.

 

அப்படியே இளம்பெண்ணிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, ஒருநாள் துப்பாக்கி சுடும் பயிற்சி தருவதாக சொல்லி சிட்லகட்டா காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு மற்ற கூலிப்படை ஆட்களுடன் சேர்ந்து யோகா ஆசிரியையான அந்த இளம்பெண்ணை நிர்வாணமாக்கி தாக்கியதுடன், ஒரு வயரை கொண்டு கழுத்தை நெறித்துள்ளார்.
 

 

உடனே சமயோஜிதமாக செயல்பட்ட அந்த பெண், தான் யோகாவில் கற்ற மூச்சுப்பயிற்சியை பயன்படுத்தி மூச்சை நிறுத்தி மயங்கியது போல நடித்துள்ளார். அவர் இறந்துவிட்டதாக நம்பிய கும்பல் அவரை அவசர அவசரமாக ஒரு குழியை தோண்டு புதைத்துவிட்டு தப்பியுள்ளனர்.

 

அதன்பின்னர் அங்கிருந்து தப்பிய அவர் மரக்கிளைகளை வைத்து உடலை மறைத்துக் கொண்டு அருகில் இருந்த கிராமம் ஒன்றில் சென்று உதவிக் கேட்டுள்ளார். அவர்கள் யோகா ஆசிரியைக்கு ஆடைகள் அளித்து, காவல் துறையை தொடர்பு கொள்ள உதவியுள்ளனர்.

 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் கூலிப்படை சதீஷ் ரெட்டி மற்றும் அவரை புக் செய்த பிந்துஸ்ரீ உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2600 லிட்டர் தாய்ப்பால் தானம்.. கின்னஸ் சாதனை பெண்ணுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!