தனக்கு கொரோனா வைரஸ் பாதித்து இருக்கலாம் என்ற அச்சத்தில் கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளிவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது தற்கொலை செய்து கொண்ட நபரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது இதனால் அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வருகிறது. இதனை அடுத்து 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தநிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி என்ற மாவட்டத்தைச் சேர்ந்த உப்பூர் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மடிவாளா என்ற 55 வயது நபர் தனக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் அவரது உடல் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது. கொரோனா வைரஸ் தாக்காமலேயே அவர் அச்சத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டது அவரது குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சியாக்கி உள்ளது
கொரோனா வைரஸால் தாக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி கொரோனா வைரஸ் தாக்காமல் மன உளைச்சல் காரணமாகவே ஒரு சிலர் மரணம் அடைந்து வருவது பெரும் சோகமாக கருதப்படுகிறது