Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பணத்தை “உருவாக்கும்”, அச்சடிக்கும் உரிமை மத்திய அரசுக்கு உள்ளது – ப. சிதம்பரம்

Advertiesment
பணத்தை “உருவாக்கும்”, அச்சடிக்கும்  உரிமை மத்திய அரசுக்கு உள்ளது – ப. சிதம்பரம்
, ஞாயிறு, 29 மார்ச் 2020 (12:47 IST)
பணத்தை “உருவாக்கும்”, அச்சடிக்கும் உரிமை மத்திய அரசுக்கு உள்ளது – ப. சிதம்பரம் ’அட்வைஸ்’

கொரோனா வைரஸால் உலகில் 660706 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 139 415 பேர் குணமடைந்துள்ளனர். 30652 பேர் உயிரிழந்துள்ளனர்இந்தியாவில் 979 பேர் 25 பேர் உயிரிழந்துள்ளனர். 87 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவிலும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்தியாவில் பெரும்பாலான மக்கள் கூலி வேலை செய்கின்றனர். இதில், கட்டிட தொழிலாளர்கள், விவசாயிகள், என எண்ணற்ற தொழில் செய்வோர் தினும் உண்பதற்கும் குடும்பத்தை சமாளிப்பதற்கும் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :

ரூ 5 லட்சம் கோடி தேவைப்படும் சூழ்நிலையில் ரூ 1 லட்சம் கோடி மட்டும் ஒதுக்கிய அரசைப் பற்றி என்ன சொல்வது? தொலைக்காட்சியில் பார்க்கும் பசியில் வாடும் குழந்தைகளையும் தம் கிராமங்களை நோக்கி நடந்தே போகும் வேலையில்லாத தொழிலாளர்களையும் அரசு பார்க்கவில்லையா? என பதிவிட்டிருந்தார்.

தனது மற்றொரு டுவிட்டர் பதிவில், அரசுக்கு அவசரமாகத் தேவைப்பட்டால் பணத்தை “உருவாக்கும்” — அதாவது அச்சடிக்கும் — உரிமை மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. மாநில அரசுகளுக்குக் கிடையாது. இது அவசர, போர்க்காலச் சூழ்நிலை. எனவே மாநில அரசுகளுக்கு அவசரமாகத் தேவைப்படும் பணத்தை மத்திய அரசு தாராளமாகத் தரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா தடுப்பு நடவடிக்கை ...நடிகர் விஜய் வீட்டில் சுகாதாரத்துறை அதிகாரிகள்