2 ஜி வழக்கைப் போல் தம்மை விடுவிக்கும் வகையில் தீர்ப்பு இருக்கும்; லாலு பிரசாத்

Webdunia
சனி, 23 டிசம்பர் 2017 (13:31 IST)
கால்நடைத் தீவன ஊழலில் ஈடுபட்டதாக லாலு பிரசாத் மீது குற்றம் சாட்டப்பட்டது. அந்த வழக்கின் தீர்ப்பு இன்று 3 மணியளவில் வெளியாகவுள்ளது.
லாலு பிரசாத் பீகார் முதல் அமைச்சராக  இருந்த போது(1991 முதல் 1995 வரை) கால்நடைத் தீவனம் வாங்கியதில், அரசு கருவூலத்தில் இருந்து 39 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. தீர்ப்பு அன்று ஆஜராகும்படி ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதால், தமது மகன் தேஜஸ்வியுடன் லாலுபிரசாத் ராஞ்சியில் உள்ள நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.  தீர்ப்பு பாதகமாகிவிட்டால் இருவரும் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த லாலுபிரசாத், 2 ஜி வழக்கு, ஆதர்ஷ் வழக்கு போன்றவற்றில் நியாயமான தீர்ப்புகள் கிடைத்திருப்பதைப் போல, தம்மை விடுவிக்கும் வகையில் தீர்ப்பு இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஷேக் ஹசீனாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புக்கு எதிர்ப்பு.. கலவரத்தில் 2 பேர் பலி..!

போதைபொருட்களுடன் வந்த பாகிஸ்தான் 255 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது: BSF தகவல்..!

கனமழை எச்சரிக்கை எதிரொலி: ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் குறித்த தகவல்..!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி.. சென்னையில் ஒரு வாரம் சிறப்பு முகாம்..!

வாட்ஸ் அப் போல் மெசேஜ் அனுப்பலாம்.. வாய்ஸ், வீடியோகால் பேசலாம்.. எக்ஸ் தளத்தின் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments