Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்க பார்த்தது வெறும் சாம்பிள்தான்; ஜெ.சிகிச்சை வீடியோ குறித்து கிருஷ்ணபிரியா

Webdunia
சனி, 23 டிசம்பர் 2017 (13:19 IST)
வெற்றிவேல் வெளியிட்ட ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ, ஓரிஜன் வீடியோவில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட சில வினாடி காட்சிகள் மட்டுமே என இளவரசி மகள் கிருஷ்ணபிரியா கூறியுள்ளார்.

 
கடந்த 20ஆம் தேதி டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு முந்தைய நாள் இந்த வீடியோ வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்த வீடியோ வெளியிடப்பட்டது குறித்து டிடிவி தினகரன், வெற்றிவேல் தன்னிடம் வீடியோ வெளியிடுவது குறித்து எதுவும் கூறவில்லை என்று தெரிவித்தார். தன்னை அறியாமலேயே இந்த வீடியோ வெளியானது என்று தெரிவித்தார். இந்நிலையில் ஜெ. சிகிச்சை வீடியோ குறித்து இளவரசி மகள் கிருஷ்ணபிரியா கூறியதாவது:-
 
அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவை சசிகலாதான் எடுத்தார். பரரோலில் வந்தபோது தேவைபட்டால் தமிழக அரசு விசாரனை கமிஷனில் இந்த வீடியோ கொடுங்கள் என்று சசிகலா எங்களிடம் கொடுத்தார். ஓரிஜினல் வீடியோ இன்னும் நீளமாக இருக்கும்.
 
ஜெயலலிதாவும், சசிகலாவும் பேசிக்கொள்ளும் காட்சிகள் அதில் உள்ளது. அதை துண்டித்து சில வினாடி காட்சிகளை மட்டும் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வெளியிடப்பட்டது சசிகலாவுக்கே தெரியாது. தன் மீது கொலைப்பழி வந்தபோது கூட வெளியிட விரும்பாத ஒரு வீடியோவை தினகரனுக்காக வெளியிட சசிகலா ஒப்புக்கொண்டிருக்க மாட்டார். 
 
இவ்வாறு கிருஷ்ணபிரியா ஜெயலலிதா சிகிச்சை வீடியோ குறித்து பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments