நாளை முதல் தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு புதிய வழிமுறை.. மறந்துவிட வேண்டாம்..!

Mahendran
திங்கள், 30 ஜூன் 2025 (15:21 IST)
இந்திய ரயில்வேயில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்படும் நடைமுறை, நாளை முதல்  அதாவது ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது. எனவே, ஐஆர்சிடிசி  கணக்குடன் ஆதார் எண்ணை இன்னும் இணைக்காத பயணிகள், உடனடியாக ஐஆர்சிடிசி இணையதளத்தில் தங்கள் ஆதார் தகவல்களை பதிவேற்றுமாறு ரயில்வே நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
 
தட்கல் டிக்கெட் முன்பதிவுகளில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கும் நோக்கில், இந்த புதிய விதி கொண்டுவரப்பட்டுள்ளது. இனி, ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி மூலம் ஆதார் சரிபார்ப்பு செய்தவர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.
 
அதுமட்டுமின்றி, ரயில்வே கவுன்டர்களில் நேரடியாக சென்று தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும். ஜூலை 15 முதல், அவர்களுக்கு ஆதார் அடிப்படையிலான ஓடிபி சரிபார்ப்பு  கட்டாயமாக்கப்படவுள்ளது. இதன் பொருள், ரயிலில் பயணம் செய்பவரின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு வரும் ஓடிபி எண்ணைப் உள்ளிட்ட பின்னரே, கவுன்டர்களில் அல்லது முகவர்கள் மூலம் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments