Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உயரதிகாரிக்கு பெண் அதிகாரி காலணி கயிற்றை கட்டிவிட்ட சம்பவம்! முதல்வர் அதிரடி உத்தரவு

higher officer

Sinoj

, வியாழன், 25 ஜனவரி 2024 (19:13 IST)
மத்திய பிரதேசத்தில்  உயரதிகாரி ஒருவரின் ஷூவின் கயிற்றை ஒரு பெண் அதிகாரி கட்டிவிட்டார் என குற்றச்சாட்டு எழுந்தது. இது சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,  அந்த அதிகாரியை பணியில் இருந்து நீக்கி முதல்வர் மோகன் யாதவ் உத்தரவிட்டுள்ளார்

மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்குள்ள சிங்ராவ்லி என்ற மாவட்டத்தில் சித்ராங்கி நகரில் சப்-டிவிசனல் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வருபவர் அஸ்வன்ராம் சிராவன்.  இந்த நிலையில், இவரது ஷூவின் கயிற்றை ஒரு பெண் அதிகாரி கட்டிவிட்டார் என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த புகைப்படமும் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,  அந்த அதிகாரியை பணியில் இருந்து நீக்கி முதல்வர் மோகன் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தன் எக்ஸ் தளத்தில், ‘’உயரதிகாரியின் காலணி கயிற்றை பெண் அதிகாரி கட்டிவிட்டதாக கூறப்படுவது கண்டனத்திற்குரியது, உடனடியாக அந்த அதிகாரியை பதவியில் இருந்து நீக்கும்படி  உத்தரவிட்டுள்ளேன். எங்களுடைய அரசியல் பெண்களுக்கான மதிப்பு அதிகம் முக்கியத்துவமானது’’ என்று தெரிவித்துள்ளார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செய்தியாளரின் சிகிச்சைக்கான முழு செலவையும் அரசே ஏற்க வேண்டும்..! எல்.முருகன் வலியுறுத்தல்.!!