Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து மாநில பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வளாகம்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2023 (12:14 IST)
அனைத்து மாநில பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வளாகம்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
அனைத்து மாநில பொருள்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் சிறப்பு வணிக வளாகம் அமைக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 
 
தற்போது ஒவ்வொரு மாநிலத்தில் கிடைக்கும் பொருட்களை அந்தந்த மாநிலங்களுக்கு சென்று வாங்க வேண்டிய நிலை இருக்கும் நிலையில் அனைத்து மாநில பொருள்களும் கிடைக்கும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பு வணிக வளாகம் அமைக்கப்படும் என்றும் அவ்வாறு அமைக்கப்பட்டால் அனைத்து மாநிலங்களிலும் அனைத்து மாநிலங்களின் பொருள்களையும் வாங்கிக் கொள்ளலாம் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 
 
மேலும் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்களை முக்கிய அம்சங்கள் இதோ;
 
ரூ.10,000 கோடி முதலீட்டில் பசு மற்றும் அதுசார்ந்த பொருளாதாரங்களை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் 
 
பெண்களுக்கான புதிய சிறுசேமிப்பு திட்டம் : 7.5% வட்டி விகிதத்தில் பெண்களுக்கான புதிய சிறுசேமிப்பு திட்டம். இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் 2 ஆண்டுகளில் அதிகப்பட்சமாக 2 லட்சம் வரை சேமிக்கலாம் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
 
மீனவர்கள் நலம் மற்றும் மேம்பாட்டிற்காக ரூ 6,000 கோடி ஒதுக்கீடு
 
சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க தனி செயலி உருவாக்கப்படும்
 
அடுத்த 3 ஆண்டுகளில் 47 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்படும்
 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

மதிமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய துரை வைகோ.. டிவி பார்த்து தெரிந்து கொண்டேன்.. வைகோ..!

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு! 100% மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்?

அடுத்த கட்டுரையில்
Show comments