நடைபாதையில் பைக் ஒட்டிய நபர்... பாடம் கற்றுக் கொடுத்த பெண் ! !

சனி, 22 பிப்ரவரி 2020 (19:35 IST)
நடைபாதையில் பைக் ஒட்டிய நபர்... பாடம் கற்றுக் கொடுத்த பெண் ! !

புனேயில் நடைபாதை பைக் ஓட்டி வந்த இளைஞருக்கு ஒரு பெண் பாடம் புகட்டிய சம்பவம் வைரல் ஆகி வருகிறது.
 
புனே மாநிலம்  எஸ்.என்.டிடி அருகே உள்ள நடைபாதையில்  பாதசாரிகள் நடந்து கொண்டிருக்கும்போது, சிக்னல் விழுவதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் தங்கள் இருசக்கர வாகனத்தை இயக்குவதல் நடைபாதைசாரிகள் கடும் பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.
 
இந்த நிலையில் போலீஸார் இதுகுறித்து முயற்சியை மேற்கொண்டும் எந்த  நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. இதையடுத்து இன்று நடைபாதையில் நிர்மலா கோகலே என்ற பெண் நடந்து கொண்டிருந்தார்.
 
அப்போது, ஒரு இளைஞர் பைகை நடைபாதையில் ஓட்டி வந்தார். அதைப்பார்த்த நிர்மலா, என் மீதி மோதி விட்டு வாகனத்தை ஓட்டிச் செல் என கடுமையாகத் தெரிவித்தார். அதனால், இளைஞர் வாகனத்தை கீழே இறக்கிவிட்டு சென்றார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் சிங்கப்பூர் பயணங்களை தவிர்க்க வேண்டும்; மத்திய அரசு வேண்டுகோள்