Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமைச்சரை சரமாரியாக சுட்டுக் கொன்ற காவலர்! – ஒடிசாவில் அதிர்ச்சி!

Naba kishor das
, திங்கள், 30 ஜனவரி 2023 (09:16 IST)
ஒடிசா சுகாதார அமைச்சரை காவலரே துப்பாக்கியால் சுட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சரும், பிஜூ ஜனதா தளம் கட்சியின் முக்கிய தலைவருமாக இருந்து வந்தவர் நபா கிஷோர் தாஸ். முன்னதாக காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர் பின்னர் அதிலிருந்து விலகி 2019 தேர்தலில் பிஜேடி சார்பில் வெற்றி பெற்று அமைச்சராக உள்ளார்.

நேற்று ஒடிசாவின் ஜார்சுகுடாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அவர் சென்றபோது பாதுகாப்புக்கு நின்ற காவலர் திடீரென அவரை சரமாரியாக சுட்டதில் அமைச்சர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனடியாக அவர் அங்கிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து அவசர சிகிச்சைக்காக புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்று இன்று அவர் உயிரிழந்தார். அவரை சரமாரியாக சுட்ட ஏஎஸ்ஐ கோபால் தாஸ் என்ற காவலரை போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். எதற்காக அவர் கொலை செய்தார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. அமைச்சரை காவலரே சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முடிவுக்கு வருகிறது ராகுல்காந்தியின் ஒற்றுமை பயணம்! – காஷ்மீரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்!