Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓட்டலில் தங்கியிருந்த கிரிக்கெட் வீராங்கனை சடலமாக மீட்பு

Advertiesment
Cricketer found dead in hotel
, சனி, 14 ஜனவரி 2023 (17:13 IST)
ஓட்டலில் தங்கியிருந்த கிரிக்கெட் வீராங்கனை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டம் மங்களாபாக் என்ற பகுதியைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை ராஜ்யஸ்ரீஸ்வைன் கடந்த 11 ஆம் தேதி  மாயமானதாக போலீஸில் புகாரளிக்கப்பட்டது.

எனவே, போலீஸார் பல இடங்களில் வீராங்கனை ராஜ்யஸ்ரீஸ்வைனை தேடி வந்தனர்.

இந்த நிலையில்,  குதிஜாதியாயின் என்ற காட்டுப்பகுதியில், மரத்தில் தொங்கிய நிலையில், அவரது  சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் காணாமல் போகும் முன்பு, பூரியில் உள்ள தன் தந்தையைப் பார்க்கச் செல்வதறாக பயிற்சியாளரிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

அவரது உடலில் காயங்கள் உள்ளதால், ராஜ்யஸ்ரீயின் மரணம் பற்றி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'பாரத் ஜடோ யாத்திரை'யில் எம்பி சந்தோக் சிங் மரணம்!