Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மணப்பெண்ணை மட்டும் போட்டோ எடுத்த புகைப்படக்காரை அடித்த மணமகன் ! வைரல் வீடியோ

Advertiesment
மணப்பெண்ணை மட்டும் போட்டோ எடுத்த புகைப்படக்காரை அடித்த மணமகன் ! வைரல் வீடியோ
, சனி, 6 பிப்ரவரி 2021 (17:30 IST)
மணமேடையில்  தன்னை ஓரமாக நிற்க சொல்லிவிட்டு மணப்பெண்ணை மட்டுமே புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்த புகைப்படக்காரை மாப்பிள்ளை அடித்தார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

வடமாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில், ராஜா போன்ற உடையில் மணமகனும் , இளவரசி போன்று சிவப்பு நிற உடையில் மணமகளும்  இருவரும்  மேடையில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது புகைப்படக்காரர் அவர்களை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்.அனால் ஒருகட்டத்தில், மணமகனை தள்ளி நிற்கச் சொல்லிவிட்டு, மிக அழகாயிருந்த மணப்பெண்ணை மாத்திரம் வளைத்து வளைத்துப் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தார்.

இதனால் கடுப்பான மணமகன், புகைப்படக்காரரை தலையில் அடித்து எல்லோரும் பார்ப்பதாக கூறிவிட்டு, மேடையைவிட்டுக் கீழே இறங்கினார். மணமகள் விழுந்து விழுந்து மணமேடையில் சிரித்தார்,. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் எல்லோராலும் லைக்செய்யப்பட்டு,அதிகம்பேரால் பகிரப்பட்டு வருகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில்'’ dream 11’’ ஆன்லைன் விளையாட்டிற்கு தடை !!