Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் பாதை!

Webdunia
வியாழன், 30 ஜனவரி 2020 (20:27 IST)
சென்னை உள்பட இந்தியாவின் பல பகுதிகளில் இருக்கும் மெட்ரோ ரயில் பூமிக்கு அடியில் மற்றும் பாலங்களில் மட்டுமே செயல்பட்டு வரும்  நிலையில் இந்தியாவின் முதல் நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயில் பாதை கொல்கத்தாவில் அமைக்கப்படவுள்ளது. இந்த பாதையில் மெட்ரோ ரயில் வரும் 2022-ம் ஆண்டு முதல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கொல்கத்தாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் வகையிலான இந்த மெட்ரோ ரயில் திட்டம் ரூ.9000 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இந்த மெட்ரோ பாதைக்காக ஹீப்ளி ஆற்றின் அடியில் 520 மீட்டர் நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருவதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
தற்போது ஹூக்ளி ஆற்றை படகு மூலம் கடக்க 20 நிமிடங்களும், ஹௌரா பாலம் மூலம் கடக்க ஒரு மணி நேரமும் ஆகிறது. ஆனால் மெட்ரோ ரயில் இயங்க தொடங்கிவிட்டால் ஒரு சில வினாடிகளில் ஹீக்ளி ஆற்றை கடந்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த மெட்ரோ ரயிலில் தினமும் 9 லட்சம் பயணிகள் பயணம் செய்ய வாய்ப்பு உள்ளது என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments