Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மெட்ரோ ரயிலில் உள்ள வசதிகளுடன் கூடிய ஏசி பஸ்: சென்னையில் அறிமுகம்

Advertiesment
மெட்ரோ ரயிலில் உள்ள வசதிகளுடன் கூடிய ஏசி பஸ்: சென்னையில் அறிமுகம்
, வியாழன், 9 ஜனவரி 2020 (22:25 IST)
சென்னை மெட்ரோ ரயிலில் ஏசி, அடுத்த நிறுத்தம் குறித்த ஒலிபெருக்கி அறிவிப்பு, அவசர தேவைக்கு ரயிலை நிறுத்தும் வசதி ஆகியவை உள்ள நிலையில் இந்த வசதிகளுடன் கூடிய பேருந்தூகள் விரைவில் சென்னை மாநகரில் இயங்கவுள்ளது
 
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் விரைவில் இயக்கப்பட இந்த ஏசி பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.
 
சென்னை மாநகரில் சாதாரண மக்களும் பயணிக்கும் வகையில் குறைந்த கட்டணத்தில் இந்த குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகவும் முதல்கட்டமாக 48 குளிர்சாதனப் பேருந்துகள் தயார் நிலையில் உள்ளதாகவும் இந்த பேருந்துகள் பொங்கல் முதல் சென்னையில் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த ஏசி பேருந்தில் 40 பயணிகள் அமர்ந்த நிலையிலும் 20 பயணிகள் நின்ற நிலையிலும் பயணம் செய்யலாம். நவீன முறையிலும், நல்ல தரத்திலும், அதிக இட வசதியுடனும் இருக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்துகள் சென்னை மக்களின் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கு: தூக்கு கயிறுகள் தயாரித்துக் கொடுத்த பக்சர் சிறைச்சாலை