Webdunia - Bharat's app for daily news and videos

Install App

17 ஆண்டுகளாக செனாப் பாலம் கட்டும் பணியில் சென்னை ஐஐடி மாணவி.. குவியும் வாழ்த்துக்கள்..!

Siva
ஞாயிறு, 8 ஜூன் 2025 (08:56 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், உலகிலேயே உயரமான செனாப் பாலம் சமீபத்தில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட நிலையில், இந்த பாலத்தை கட்டுவதில் சென்னை ஐஐடியில் படித்த, ஆந்திராவைச் சேர்ந்த பெண் இன்ஜினியர் மாதவி லதா என்பவர் 17 ஆண்டு காலம் பணிபுரிந்துள்ளார் என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பாலம், இந்திய இன்ஜினியரிங் துறையில் ஒரு பெருமைக்குரியதாக உள்ளது. இந்த பாலத்தை கட்டுவதில் ஆரம்பத்திலிருந்து இருந்த இன்ஜினியரிங் குழுவில் இருந்தவர்களில் ஒருவர் மாதவி லதா. ஆந்திராவைச் சேர்ந்த இவர், சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர். அரசு பள்ளியில் படித்து, மருத்துவராக வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது. ஆனால் பெற்றோருக்கு வசதி இல்லாததால், இன்ஜினியரிங் துறையைத் தேர்வு செய்தார்.
 
ஆந்திராவில் உள்ள ஜவஹர்லால் நேரு இன்ஜினியரிங் கல்லூரியில் படித்த இவர், அதன் பின் வாரங்காலில் உள்ள என்ஐடி கல்வி நிறுவனத்தில் எம்.டெக் படித்தார். அதன் பின்னர், சென்னை ஐஐடியில் பாறை பொறியியல் துறையில் பி.எச்.டி பட்டம் பெற்றார்.
 
செனாப் பாலம் கட்டிய நிறுவனம் பணியை தொடங்கியது முதலே, மாதவி லதா அந்த பணியில் இருக்கிறார் என்பதும், இது பொறியியலின் அதிசயம் என்றும், இந்தியாவால் பொறியியல் துறையில் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கே இந்த பாலம் ஒரு உதாரணம் என்றும் கூறப்படுகிறது.
 
இந்த பாலத்திற்கு மாதவி லதா குழு தான் வரைபடம் மற்றும் தொழில்நுட்பங்களை செய்து கொடுத்தது என்றும், 17 ஆண்டுகள் தன்னுடைய வாழ்க்கையை இந்த பாலத்திற்காகவே அவர் அர்ப்பணித்து உள்ளதை அடுத்து, அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments