Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’’அதை ’’விற்று குடும்பத்தை நடத்திய ஊழியர்....

Advertiesment
’’அதை ’’விற்று குடும்பத்தை நடத்திய ஊழியர்....
, வியாழன், 11 பிப்ரவரி 2021 (23:34 IST)
கர்நாடக மாநிலத்தில் கொரோனா கால ஊரடங்கில் கடந்த சில மாதங்களாகப் போக்குவரத்திற்கு தடை இருந்த நிலையில் தற்போது மத்திய மாநில அரசுகள் பேருந்துகள் இயங்க அனுமதி அளித்துள்ளது. ஆனால் ஊழியர்கள் குறைவான ஊழியம் பெற்றுவருவதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த போக்குவரத்துக் கழகம் ஊழியர் ஒருவர் தனது சிறு நீரகத்தை விற்பனை செய்து குடும்பச் செலவுகளை சமாளித்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் கொப்பல் மாவட்டம் குஷ்டகி டவுனில் வசித்து வருபவர் அனுமந்த்ரா. இவர் தற்போது, ரூ.16 ஆயிரம் சம்பளம் பெற்று வருகிறார். ஆனால் கொரொனா கால ஊரடங்கின்போது ரூ.3000 மட்டுமே சம்பளம் பெற்றிருக்கிறார். அப்போது, குடும்பச் செலவுகளுக்காகவும் தனது தாயின்மருத்துவத்திற்காகவும் தனது சிறுநீரகத்தை விற்றுள்ளார். இதுகுறித்து ஹனது பேஸ்புக் பக்கத்தில் அவரே பதிவிட்டுள்ளார்

இதுகுறித்து அறிந்து பலரும் அவருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராமர் கோயில் கட்டுவதற்காக ரூ.1000 கோடி நன்கொடை வசூல் !