ஐதராபாத்தில் திடீரென குப்பைத் தொட்டி வெடித்து சிதறியதில் துப்புரவு தொழிலாளர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவில் ஐதராபாத்தில் உள்ள குசாய்குடா பகுதியில் நேற்று மாலை நாகராஜூ என்ற துப்புரவு பணியாளர் துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். சாலையோர மின்கம்பம் அருகே இருந்த குப்பைத் தொட்டியில் குப்பைகளை அவர் சேகரித்துக் கொண்டிருந்தபோது திடீரென குப்பைத் தொட்டி வெடித்து சிதறியது.
இதில் நாகராஜூ தூக்கி வீசப்பட்டார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஓடி வந்து பார்த்தபோது நாகராஜூ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் அப்பகுதியில் வந்து விசாரணை மேற்கொண்டனர். குப்பையில் இருந்த காலாவதியான பெயிண்ட் டப்பா வெடித்து சிதறியதில் நாகராஜூ இறந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், குப்பைத்தொட்டி வெடித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K