Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிர்வாண நிலையில் காட்டுப்பகுதியில் இளம் ஜோடி கொடூர கொலை!

Advertiesment
நிர்வாண நிலையில் காட்டுப்பகுதியில் இளம் ஜோடி கொடூர கொலை!
, புதன், 5 ஏப்ரல் 2017 (12:16 IST)
புனே காட்டுபகுதியில் இளம் ஜோடி கொடூரமாக கொலை செய்யப்பட்டு நிர்வாண நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புனே பகுதியை சேர்ந்த மாணவி ஸ்ருதி (23), அகமத்நகர் மாவட்டத்தை சேர்ந்த சார்தக் (24), புனேயில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்தனர்.

 
இந்த நிலையில் சார்தக் கல்லூரி அருகே வீடு வாடகையிலும், ஸ்ருதி விடுதியிலும் தங்கி படித்து வந்தனர். கடந்த 2 ஆம் தேதி  ஐ.என்.எஸ். சிவாஜி கடற்படை பயிற்சி தளத்திற்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் கை, கால்கள் கட்டப்பட்டு நிர்வாண நிலையில் இருவரது உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
 
சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே சார்தக் பைக் கிடைத்துள்ளது. இதனால் சந்தேகத்தில் பேரில் இருவரை கைது செய்துள்ளனர். மேலும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். கல்லூரி மாணவர்களின் கொடூர கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கணவரின் முகத்தை கூட சென்று பார்க்காத நந்தினி.....