Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமணம் முடிந்த சிலமணி நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்த மணமகள்!

Advertiesment
திருமணம் முடிந்த சிலமணி நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்த மணமகள்!
, சனி, 6 மார்ச் 2021 (15:03 IST)
திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் பரிதாபமாக மணமகள் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒடிசா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
ஒரிசா மாநிலத்தில் சோனேபூர் என்ற பகுதியில் குப்தேஸ்வரி என்பவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மிகவும் சிறப்பாக இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர் 
 
திருமணம் முடிந்ததும் கணவருடன் செல்லும் முன் பெற்றோரிடம் இருந்து விடைபெறும் போது அளவுக்கு அதிகமாக மணமகள் அழுததாக தெரிகிறது. இதனால் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் உடனடியாக அவரை மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது
 
திருமணமாகி ஒரு சில மணி நேரத்தில் பெற்றோர் பிரிவை தாங்க முடியாமல் அழுத மணமகள் பரிதாபமாக உயிரிழந்தது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துரைமுருகனுக்கு எதிராக விருப்பமனு தாக்கல் செய்த திமுக தொண்டர்… அதிர்ச்சியடைய வைக்கும் காரணம்!