கேரள மாநிலம் காசர்கோட்டு என்ற பகுதியில், ஒரு வாலிபர் வழியில் நின்ற சிறுமியை தூக்கி தரையில் போடும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் காசர்கோடு என்ற மாவட்டத்தில் உள்ள மஞ்சேஸ்வரம் பகுதியில் ஒரு மதரசா உள்ளது.
இதன் அருகில் உள்ள சாலையில் நேறறு ஒரு 8 வயது சிறுமி நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஒரு வாலிபர், அந்த சிறுமியை கழுத்தைப் பிடித்துத் தூக்கி, அவரை கீழே தூக்கிப் போட்டார்.
இதில், அந்தச் சிறுமியின் வயிறு, உடலில் பல இடங்களிலும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து, சிறுமி தன் வீட்டில் பெற்றோரிடம் கூறவே, அவர்கள் போலீஸில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, மதரசாவில் உள்ள சிசிடிவி காட்சியைக் கைப்பற்றி, சிறுமியைத் தாக்கிய வாலிபர் மீது போலீஸார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.