Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மோடியிடம் சொல்ல சொன்னாயே, சொல்லிவிட்டேன்.. போதுமா இன்னும் வேணுமா? மீம்ஸ் வைரல்..!

Advertiesment
ஆபரேஷன் சிந்தூர்

Siva

, வியாழன், 8 மே 2025 (08:43 IST)
ஏப்ரல் 22ஆம் தேதி, காஷ்மீரில் உள்ள பஹல்காம் என்ற இடத்தில், தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகளை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றனர். அவர்களது இலக்கு குறிப்பாக இந்துக்கள் என்பதும் உறுதி செய்யப்பட்ட பிறகு இந்த கொடூரம் நடைபெற்றது.
 
இந்த சம்பவம் இந்தியாவை மட்டுமின்றி, உலகம் முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. கண்முன்னே கணவரை சுட்டு கொன்ற தீவிரவாதியை பார்த்த பெண் ஒருவர், “என்னையும் கொன்றுவிடு” என்று கூறியதாகவும், அதற்கு அந்த தீவிரவாதி, “போய் மோடியிடம் சொல்” என்று கூறியதாகவும் சொல்லப்பட்டது.
 
இந்த பரிதாபமான சம்பவத்துக்குப் பிறகு, பிரதமர் மோடி அதிரடி நடவடிக்கை எடுத்தார். இதன் விளைவாக 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள பல தீவிரவாத முகாம்கள் கிட்டத்தட்ட அழிந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மீம்ஸ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், தீவிரவாதி “மோடியிடம் சொல்” என்று கூறுவது போலவும், அதற்கு அந்த பெண் “மோடியிடம் சொல்லிவிட்டேன், அடி போதுமா? இன்னும் வேணுமா?” என்று பதிலளிக்கின்றது போலவும் காணப்படுகிறது.
 
இந்த மீம்ஸ், மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று, இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி: இந்தியா கூட்டணி தலைவர்கள் உள்பட பிரதமருக்கு குவியும் பாராட்டுக்கள்..!