நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில், சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இதில் சென்னை அணி திரில்லான முறையில் வெற்றிபெற்றது என்பது நாம் ஏற்கனவே பார்த்ததுதான்.
இந்த நிலையில், போட்டி தொடங்கும் முன்பாக மைதானத்தில் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. காரணம், நேற்று அதிகாலை இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களை எதிர்த்து அதிரடியாக தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாகவும், இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாகும் என்றும் செய்திகள் வெளியாகின.
இந்த வெற்றியை ஒட்டி, மைதானத்தில் போட்டி தொடங்குவதற்கு முன்னர் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. இது முழு நாடும் ராணுவத்திற்கு உறுதுணையாக இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ந்ததென கூறப்படுகிறது.
போட்டிக்கு பிறகு வீரர்கள், “இந்திய ராணுவத்தைப் பார்த்து பெருமை கொள்கிறோம்” என்று கூறியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சாதாரணமாக, ஐபிஎல் போட்டிக்கு முன் தேசிய கீதம் ஒலிக்கப்படுவதில்லை. ஆனால், பாகிஸ்தானை எதிர்த்து நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு மரியாதை செய்வதற்காகவே இந்த முறை தேசிய கீதம் பாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.