ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பயங்கரவாதியின் சகோதரர் ஒருவர் தனது வீட்டில் தேசியக்கொடியை ஏற்றி வைத்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அனைவரும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்திருந்தார்
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஜாவித் மமூது என்பவர் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டவர். கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் தேடப்படும் குற்றவாளியாக உள்ளார்.
இந்த நிலையில் இவருடைய சகோதரர் தனது வீட்டில் இன்று தேசிய கொடி ஏற்றியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது என் மனதில் இருந்து தேசியக்கொடியை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. முதல் முறையாக ஆகஸ்ட் 14ஆம் தேதி நான் என் கடையில் அமர்ந்திருக்கிறேன். வழக்கமான இந்த நாட்களில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கடையை அடைத்து விடுவோம், முன்பிருந்த அரசியல் விளையாட்டுகள் இப்போது இல்லை என்று தெரிவித்துள்ளார்.